பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் குமரி மாவட்ட ஆட்சியர்

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் குமரி மாவட்ட ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.  

பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதோடு அதன் அவசியம் குறித்து, குமரி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தடுப்பூசி போடும் ஏற்பாடுகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அரசு உத்தரவுப்படி 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி குமரியில் தொடங்கி உள்ளது. அவ்வகையில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story
ai marketing future