45 வயதுக்கு மேற்பட்டோருக்கு குமரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு குமரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு
X

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 வார காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்பாக பல்வேறு நடவடிக்கைகளை வருகிறது.அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் 2 வார காலத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி அருகிலுள்ள அரசு மருத்துமனையை அணுகவேண்டும் எனவும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!