குமரியில் கனமழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

குமரியில் கனமழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
X

குமரியில் கனமழையின் போது மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.

குமரியில் கன மழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறு, குளங்கள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஊர்காவல் படையினர் மிக சிறப்பாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் நன் மதிப்பை பெற்றனர்.

இந்நிலையில் தன்னலம் கருதாது மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை அவர்கள் பணி செய்து வரும் இடத்துக்கே நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஊர்காவல் படையினரை நேரில் வரவழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்த வெகுமதியினை வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!