தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குமரியில் நடைபெற்ற கோமாதா பூஜை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  குமரியில் நடைபெற்ற கோமாதா பூஜை
X
குமரியில் பிரசித்தி பெற்ற திக்குறிச்சி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோமாதா பூஜை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மஹா சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடைபெறும் பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமாக உள்ளது திக்குறிச்சி ஸ்ரீ மஹா தேவர் ஆலயம். இந்த கோவிலில் உள்ள கோசாலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோமாதா பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரசித்தி பெற்ற கோ பூஜை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பசுக்களை அலங்காரம் செய்து பல்வேறு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பசுகளுக்கு புல் உள்ளிட்ட தானியங்கள் வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture