குமரியில் தடுப்பூசி தொடர் தட்டுப்பாடு - ஏமாற்றம் அடையும் பொதுமக்கள்

குமரியில் தடுப்பூசி தொடர் தட்டுப்பாடு - ஏமாற்றம் அடையும் பொதுமக்கள்
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி தொடர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி குறித்த முறையான தகவல்கள் மற்றும் இருப்பு அளவு குறித்த வெளிப்படையான அறிக்கை இல்லாததால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுவதோடு பல நாட்களாக அழைக்களிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் 33 இடங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, இதற்காக காலை 6 மணி முதலே தடுப்பூசி மையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய நிலையில் சுமார் 28 மையங்களுக்கு பிற்பகல் 12 மணி வரை தடுப்பூசி வரவில்லை.

ஏற்கனவே தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் தடுப்பூசி வர நீண்ட நேரம் ஆனதால் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

மேலும் பலர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க அமைக்கப்பட்ட வட்டத்தில் தங்களது செருப்பை சுழற்றி வைத்து விட்டு நிழலில் கூட்டமாக அமர்ந்து இருந்த நிலையில் இதனை போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் கண்டு கொள்ளவில்லை.

குமரிமாவட்டத்தை பொறுத்தவரை தொடக்கம் முதலே தடுப்பூசி போடுவதில் தொடர்ந்து குளருபடிகள் இருந்து வரும் நிலையில் நான்கு நாட்களுக்கு பின்னர் போடப்படும் தடுப்பூசியால் பொதுமக்கள் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!