கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளான இனையம், பரக்காணி, இரையுமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களை, மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன், ஆய்வு செய்ய வந்து சென்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமரி மேற்கு கடற்கரை பகுதிகளான இனையம், பரக்காணி, இரையுமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, இனையம் பகுதியில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களில், உடனடியாக தூண்டில் வளைவுகள் அமைக்கவும், பரக்காணி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கடல்நீர் ஆற்றுநீருடன் கலப்பதை தடுக்க ரூ. 63 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளையும் பார்வையிட்டார்.
துறைமுக முகத்துவாரப்பகுதியில் மணல் மேடுகள் குவிந்து கிடப்பதால் நேரிடும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நிரந்தரமாக மணல் அள்ளும் இயந்திரம் அமைக்க வேண்டியதன அவசியம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu