கன்னியாகுமரி: 11,483 வழக்குகள் பதிவு, 861 வாகனங்கள் பறிமுதல்.. -காவல்துறை நடவடிக்கை

கன்னியாகுமரி: 11,483 வழக்குகள் பதிவு, 861 வாகனங்கள் பறிமுதல்.. -காவல்துறை நடவடிக்கை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றால் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கை கடைபிடித்து அத்தியாவசிய தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவித்த காவல்துறை தொடக்கத்தில் வெளியே சுற்றி தெரிந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் ஊராடங்கை மீறி வெளியே மக்கள் நடமாட்டம் அதிகாரத்தை தொடர்ந்து அபராதம், வாகனம் பறிமுதல் என அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டது, அதன் படி மாவட்டத்தில் 43 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் 1868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 137 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. முழு ஊரடங்கு தொடங்கிய 10 ஆம் தேதி முதல் இன்று வரை மாவட்டத்தில் விதி மீறல், தேவையின்றி வெளியே வருதல் என பல்வேறு காரணங்களுக்காக 11,483 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன, மேலும் 861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil