குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

குமரியில் கொரோனா  தடுப்பு நடவடிக்கை தீவிரம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கோரோணா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1643 ஆக உள்ளது.

இவர்களில் 453 நபர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் 837 நபர்கள் கோவிட் கேர் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 353 நபர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை 21613 (இருபத்தி ஒன்றாயிறத்து அருநூற்று பதிமூன்று ) ஆக உள்ள நிலையில் இவர்களில் 19082 ( பத்தொன்பதாயிறத்து என்பத்தி இரண்டு ) நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசி மருந்து 87450 ( என்பத்தி ஏழாயிறத்து நானூற்று ஐம்பது ) நபர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து 27098 ( இருபத்தி ஏழாயிறத்து தொண்ணூற்று எட்டு ) நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 43446 ( நாற்பத்தி மூன்றாயிரத்து நானூற்று நாற்பத்தி ஆறு ) நபர்களிடம் இருந்து ரூபாய் 8296426 ( என்பத்தி இரண்டு லட்சத்து தொண்ணூற்று ஆராயிரத்து நானூற்று இருபத்தி ஆறு ) அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோயற்ற நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!