குமரியில் மாட்டுடன் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வேத சுகின். இவர் அப்பகுதியில் ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு எடுத்து மாட்டுப் பண்ணை நடத்தி வந்துள்ளார். அதற்காக 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் அளித்த வேதசுகின் மாதாம் மாதம் வாடகையாக 5 ஆயிரம் ரூபாயையும் ஐயப்பனுக்கு வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் வேத சுகின் மாட்டு பண்ணையில் வைத்து அய்யப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சனைகள் ஏற்படுவதோடு பண்ணையை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லாததால் தொழிலை கைவிட முடிவு செய்த வேத சுகின் ஐயப்பனிடம் தனது முன்பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் முன்பணத்தை திருப்பி கொடுக்காமல் அய்யப்பன் கால தாமதம் செய்ததாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது, இதனால் மன வேதனையடைந்த வேத சுகின் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கும் நடவடிக்கை இல்லாததால் நீதி கேட்டு தான் வளர்த்த மாட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வேத சுகின் நிலத்தின் உரிமையாளர் மீது புகார் அளித்தார்.
அதோடு தற்கொலை செய்து கொள்வதற்காக பெட்ரோலும் எடுத்து வந்துள்ளார், இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu