குமரியில் போதையில், போக்குவரத்து மிகுந்த சாலையில், படுத்து தூங்கிய குடிமகன்
கன்னியாகுமரியில் போதையில் நடுசாலையில் தூங்கிய குடிமகனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து மது கடைகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் குடிமகன்கள் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி குடித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் சில குடிமகன்கள் மது குடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் முழு போதையில் சாலைகளில் ஓரம் உடலில் துணிகள் இல்லாமல் விழுந்து கிடப்பதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் மாலை வேளையில் குடிமகன் ஒருவர் மது போதையில் வந்து நடக்கமுடியாமல் சாலையின் நடுவே திடீரென படுத்துவிட்டார் இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
மழைக்காக மேகம் கருத்து காணப்பட்ட நிலையில் அவசரம் அவசரமாக பொதுமக்கள் சென்றுகொண்டு இருந்த நிலையில் சாலையில் படுத்து தூங்கிய குடிமகனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனிடையே சாலையில் படுத்து கிடந்த அந்த நபரை ஒரு சில வாலிபர்கள் தூக்கி அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu