30 நிமிடத்தில் 25 பரோட்டா, பிரியாணி, ஜூஸ் சாப்பிட்டால் ரூ.2021 பரிசு

30 நிமிடத்தில் 25 பரோட்டா, பிரியாணி, ஜூஸ் சாப்பிட்டால் ரூ.2021 பரிசு
X

 நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டி.

25 பரோட்டா, சிக்கன் பிரியாணி, பைன் ஆப்பிள் ஜூஸ் ஆகியவற்றை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.2021 பரிசு உணவகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புது முயற்சியாக உணவு உண்ணும் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் முன்பணமாக ரூ.400 செலுத்தி 25 புரோட்டாக்கள், ஒரு சிக்கன் பிரியாணி, பைனாப்பிள் ஜூஸ் ஆகியவற்றை 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கவேண்டும். அவ்வாறு சாப்பிட்டு முடித்தவர்களுக்கு ரூ.2021 பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான சாப்பாட்டு பிரியர்களான இளைஞர்கள் ஆர்வமுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.போட்டியின் முடிவில் யாரும் வெற்றிப்பெறாத நிலையில் அவர்கள் சாப்பிட்ட உணவு போக மீதமுள்ள உணவுகளை கூடவே எடுத்து சென்றனர்.

தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற இந்த உணவு திருவிழா பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!