திக்குறிச்சி மஹா தேவர் கோயில் சாலை துண்டிப்பு: இந்து முன்னணியினர் போராட்டம்
திக்குறிச்சி மஹா தேவர் ஆலயம் அருகே வள்ளகடவு பகுதியில் மழை நீர் ஓடை, சிறு பால பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டுள்ளன
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாள், பனிரெண்டு சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமாகவும் வாகனங்களில் சென்றும் வழிபடும், சிவாலய ஓட்டம் வரும் 28 தேதி நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இந்த புனித யாத்திரை மேற்கொள்ளும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனிடையே இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயம் அருகே வள்ளகடவு பகுதியில் மழை நீர் ஓடை, சிறு பால பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு, ஆறுமாதத்திற்கு மேலாகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
தற்போது இந்த சாலை வழியாகத்தான் மூன்றாவது சிவாலயத்திற்கு பக்தர்கள் செல்ல வேண்டும், இது போன்று இந்த பகுதி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இந்த சாலை பணிகளை உடனே முடிக்க பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் வள்ளகடவு பகுதியில், மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசாசோமன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை சரக டிஎஸ்பி தலைமையிலான போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறியது. இரண்டு நாட்களில் பணிகள் முடிக்கப்படாவிட்டால் ஞாயிற்றுகிழமை மறியல் போராட்டம் நடத்துவதாக பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu