குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் தலைமறைவு

குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் தலைமறைவு
X

பைல் படம்.

குமரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தலைமறைவு ஆன நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். மகள் அருகில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நாகர்கோவில் அருகே தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவரின் மகன் ஆட்டோ ஓட்டுனரான வினோத் கடந்த மாதம் 4 ஆம் தேதி சிறுமி படிக்கும் பள்ளி அருகே சவாரிக்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமியை பார்த்து சிரித்து, கையசைத்து மெதுவாக பேச்சு கொடுத்து உள்ளார். பின்னர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி வினோத் சிறுமியை பின்தொடர்ந்து வந்து, ஆசை வார்த்தைகள் பேசி காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும் சிறுமியும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து உள்ளார்.

தொடர்ந்து 2 பேரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை தெங்கம்புதூர் பகுதிக்கு அழைத்து சென்ற வினோத் சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கைகள் மாறுதலாக இருந்த நிலையில் சிறுமியிடம் விசாரித்த பெற்றோர்கள் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததோடு இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே வினோத் தலைமறைவான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!