விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது -இந்து மகா சபா தலைவர் கோரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது -இந்து மகா சபா தலைவர் கோரிக்கை
X

குமரியில் உலக நன்மைக்காகவும், கொரோனா அழிய வேண்டும் என்பதற்காகவும் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

கொரோனா காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்க கூடாது என இந்து மகா சபா தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆடி பூரம் வழிபாடு அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் காரணமாக குமரிமாவட்டத்தில் ஆடி பூரம் அம்மன் வழிபாடு கலை இழந்தது.

இதனிடையே ஆடிப்பூரத்தை முன்னிட்டு வல்லங்குமரவிளை பகுதியில் உள்ள ஜெய் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சக்தி பீடத்தில் யாக பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் கொரோனா பெரும் தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும், நாடும் நாட்டு மக்களும் சுபிட்சம் பெற சுதர்சன ஹோமம், மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இந்து மகா சபா தேசிய செயலாளர் தா. பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறும் போது.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் ஓணம் விழாவை தொடர்ந்து தளர்வுகள் கொடுக்கபட்டு உள்ளது போல தமிழகத்தில் விநாயகர் சதூர்திக்கும் தமிழக அரசு தடை விதிக்க கூடாது என கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!