குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

குமரியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்
X
குமரி மூஞ்சிறை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டதில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அணில்குமார் மூஞ்சிறை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக 4 பேர் கூடி நிற்பதை கண்டார்.அங்கு சென்று பார்த்த போது 4 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தினேஷ்(36), பிரபின்(41) விஜய்(33). மற்றும் ஜஸ்டிஸ் (34) ஆகியோர் என தெரிய வந்தது. தொடர்ந்து 4 பேரையும் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் சூதாடிய சீட்டு கட்டு மற்றும் சூதாடிய 150 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!