மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.4500 ரூபாய்: பனியால் விலை 3 மடங்கு அதிகரிப்பு

மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.4500 ரூபாய்: பனியால் விலை 3 மடங்கு அதிகரிப்பு
X

கோப்பு படம் 

கடும் பனி காரணமாக, குமரியில் மல்லி, பிச்சி உட்பட அனைத்து பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற டாக்டர் எம்ஜிஆர் மலர் சந்தைக்கு குமரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

தற்போது தோவாளை மலர் சந்தையில் மல்லி, பிச்சி, ரோஜா உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் வரை ரூ. 1500 முதல், ரூ. 2500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை பூவின் விலை தற்போது, 4500 ரூபாயாகவும், 800 முதல் 1200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூவின் விலை, தற்போது 2200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று ரோஜா, அரளி செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவு காரணங்களால் பூக்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. அத்துடன், தற்போது கார்த்திகை மாதம் கோவில் விசேஷங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் அதிகமிருப்பதால், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!