திருவோணம் பண்டிகை தொடக்கம், மலர் வியாபாரிகள் உற்சாகம்

திருவோணம் பண்டிகை தொடக்கம், மலர் வியாபாரிகள் உற்சாகம்
X

தோவாளை மலர் சந்தையில்  கலை கட்டிய பூ விற்பனை

கேரளாவில் திருவோணம் பண்டிகை தொடங்கி உள்ள நிலையில் குமரியில் பூ வியாபாரம் அதிகரித்து உள்ளதால், வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோண பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 10 நாட்கள் மலையாள மொழி பேசும் மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது மாமன்னர் மகாபலி சக்கரவரத்தி தங்கள் வீடுகளுக்கு வந்து அருளாசி வழங்குவார் என்பது கேரளா மக்களின் நம்பிக்கை.

அதன் படி இந்த 10 நாளும் கேரளா மக்கள் தங்கள் வீடுகளின் முன் பல்வேறு மலர்களால் அத்தப்பூ கோலம் போட்டு மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பார்கள், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாட கேரள அரசு தடை விதித்திருந்தது.

இந்த ஆண்டும் இரண்டாம் அலை கொரோனா கேரளாவில் அதிகரித்து வருவதால் பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்துள்ள கேரளா அரசு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை கொண்டாட அனுமதி அளித்துள்ளது.

அதன் படி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கி உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் விற்பனை கலை கட்டி உள்ளது, கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராத நிலையில் ஆன் லைன் முறையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது, ஓணம் மலர் விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!