குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்
X

மத்திய அரசின் மீன் படி திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் உள்ள  48 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய கடல் சார் மீன் பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்களம் உட்பட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டியும், தங்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மத்திய அரசிற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும் என்பதால் மத்திய அரசு புதிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!