குமரியில் மீன்பிடி துறைமுக கட்டுமான பணி துவங்க கோரி வேலை நிறுத்தம்
கருப்பு கொடியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகமுக துவாரத்தில் கடலடி காலங்களில் ஏற்படும் மண்திட்டு காரணமாக கடந்த காலங்களில் 26 மீனவர்கள் படகு கவிழ்ந்து உயிர் இழந்தனர்.
இதை தொடர்ந்து மீனவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து வல்லுனர் குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறு கட்டமைப்பு செய்ய ஆய்வு செய்து வரைபடங்கள் தயார் செய்தனர்.
ஆனால் இதுவரை பணிகள் செய்யாததை கண்டித்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் காலம் என்பதால் உடனே பணிகள் துவங்க வலியுறுத்தி தூத்தூர் , இணையம் மண்டலத்தை சேர்ந்த நீரோடி முதல் மிடாலம் வரை உள்ள 15 மீனவ கிராமங்களை சேர்ந்த ஐம்பதாயிரம் மக்கள் துறைமுக பயனாளர்கள் தங்களது 2500 விசைப்படகுகள் மற்றும் ஆறாயிரம் நாட்டு படகுகளை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது, மேலும் உடனே பணிகள் துவங்கா விட்டால் வரும் காலங்களில் பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர், படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu