ஷாக் அடித்து உயிருக்கு போராட்டம் - மரத்தில் இருந்து வாலிபர் மீட்பு

ஷாக் அடித்து  உயிருக்கு போராட்டம் - மரத்தில் இருந்து வாலிபர் மீட்பு
X
குமரியில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில், புளிய மர உச்சியில் இருந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி அருகே கருங்காலிவிளை பகுதியில், கோவில் திருவிழா நடக்க உள்ளது. அதற்காக கணபதிபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்பவர் கோவில் அமைந்திருக்கும் பகுதியில், ஒலி ஒளி அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கோயிலின் அருகாமையில் உள்ள புளிய மரத்தில், மின்விளக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. எனினும் அசம்பாவிதம் ஏற்படாமல் உயிருக்கு மரத்தின் உச்சியிலேயே மரக்கிளையில் சிக்கிய ராஜு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அவரை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் காப்பாற்ற முயன்றபோது, புளிய மரத்தில் மின்சாரம் ஷாக் அடித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மின் இணைப்பை துண்டித்து, ராஜுவை மீட்டனர்.

மேலும் சிகிச்சைக்காக ராஜுவை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி அதிர்ஷ்டவசமாக இளைஞர் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai marketing future