குமரி பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து - பரபரப்பு

குமரி பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து - பரபரப்பு
X

குப்பையில் ஏற்பட்ட தீ.

குமரியில் பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் வராததால் பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய பாலமாக, குழித்துறை புதிய பாலம் இருந்து வருகின்றது. தற்போது புதிய பாலம் மற்றும் மேம்பாலம் வந்த காரணத்தினால், குழித்துறை பகுதியில் உள்ள பழைய பாலத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பழைய பாலத்தின் இருபுறங்களிலும் சமூக விரோதிகள் வீட்டு கழிவுகள் மற்றும் உணவக கழிவுகள் உட்பட பல கழிவுகளை இந்த பகுதியில் இரவு நேரத்தில் கொட்டி செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை வேளையில் தேங்கி கிடந்த குப்பையில், திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது. இந்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென பரவி அருகில் இருந்த ரப்பர் தோட்டம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவி அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனிடையே தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்த போதும் அருகில் இருக்கும் குழித்துறை தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைக்கவோ, கட்டுப்படுத்தவோ முயற்சிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்