திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி அறிவிப்பு: குமரியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி அறிவிப்பு: குமரியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
X
குமரியில் திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து வாலிபர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.

திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள வினோதமான சுவரொட்டிகளை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டே நடைபெறுகிறது. இதனிடையே சமீப காலமாக கிள்ளியூர் வட்டார பகுதிகளில் பேசி முடிக்கும் நிலை உள்ள திருமணங்களை சம்பந்தப் பட்ட பெண் வீட்டாரிடம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இல்லாததையும் பொல்லாததையும் எடுத்துக்கூறி அதிர்ச்சியுடன் திரும்பி போக செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருங்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மதில் சுவர்களில் எல்லாம் வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டபட்டு இருந்தது. அதில் பிச்சவிளை, ஆயினிவிளை நயவஞ்சகர்களுக்கு சமர்ப்பணம் என்றும் வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என்றும் இருந்தது.

மேலும் ஒரு நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவரது தொழில் திருமண வரன் தடுத்தல் எனவும் உப தொழிலாக பாக்கு வியாபாரம் எனவும் இருந்தது. இவை அனைத்திற்கு மேலாக சிலர் விரைவில் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

Tags

Next Story