ஈஸ்டர் பண்டிகை - குமரியில் விமரிசையாக கொண்டாட்டம்

ஈஸ்டர் பண்டிகை - குமரியில் விமரிசையாக கொண்டாட்டம்
X

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த தேவாலயம். 

சிறப்பு பிரார்த்தனைகளுடன் ஈஸ்டர் பண்டிகை குமரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இரவு தொடங்கி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future