குமரியில் கனமழையால் குளமாக மாறிய பிரதான சாலை.

குமரியில் கனமழையால் குளமாக மாறிய பிரதான சாலை.
X

கனமழை காரணமாக சாலையில் தேங்கியுள்ள நீர்

குமரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பிரதான சாலை குளம் போல் காட்சியளிப்பதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக தேங்காய்பட்டிணத்தில் இருந்து கருங்கல் செல்லும் பிரதான சாலையின் நடுவே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் தண்ணீரில் நீந்திய படி செல்கின்றன.

தொடர்ச்சியாக இந்த சாலை வழியாக தண்ணீரில் மிதக்கும் படி வாகனங்கள் செல்வதால் வாகனங்கள் பழுது ஏற்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழும் அவலமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு அத்தியாவசிய தேவைகளுக்கு வந்து செல்ல முடியாமல் பாதசாரிகளும் பரிதவித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்க காரணம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்காததே என ஊர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

ஆகையால் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி மேற்கொண்டு சாலையின் நடுவே மழைநீர் தேங்காவண்ணம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags

Next Story