களபணியாளர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

களபணியாளர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. பரவலை தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் முதல் தவணை தடுப்பு ஊசி போட்டு வந்த நிலையில் இரண்டாவது தவணையாக, முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினருக்கு போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் சந்தேகத்தை தடுக்கும் வகையில் முன் மாதிரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார். பின்னர் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு, காவலர்கள் முன் அவர் பேசுகையில் ஊசி போடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார். மேலும் காவலர்கள் அனைவரும் பணிசெய்யும் போது தகுந்த இடைவெளி விட்டு பணிசெய்ய வேண்டும் என்றும், முகக்கவசம், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 150 காவலர்களும், காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களும் இரண்டாவது தவணை தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டனர். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களிலும், மற்றும் பிற இடங்களிலும், காவலர்கள் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!