தரிசனத்திற்கு தடை: வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

தரிசனத்திற்கு தடை: வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
X

கோவில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் வெளியில் இருந்து சாமி கும்பிடும் பக்தர்கள்

அரசு உத்தரவுப்படி கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவிலின் வெளியே நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக கோவில்களில் வார கடைசி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து உள்ளது.

அரசு உத்தரவின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தியும் பழமையும் கொண்ட கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில், நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டன.

கோவில்களில் ஆகம விதிப்படி தினமும் நடைபெறும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story