சைபர்கிரைம் விழிப்புணர்வு பணியில் குமரி போலீசார் வேகம்

சைபர்கிரைம் விழிப்புணர்வு பணியில் குமரி போலீசார் வேகம்
X

குமரி மாவட்ட காவல்துறை சார்பில், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

குமரியில் சைபர்கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து காவல்நிலைய போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் மற்றும் சைபர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை, பேருந்து மற்றும் ஆட்டோக்களில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சைபர் கிரைம் குற்றங்களை குறைக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் சார்பிலும், சைபர் கிரைம் விழிப்புணர்வு நடத்த அவர் உத்தரவிட்டார். அதன்படி சைபர் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மூலமாக பள்ளிகள், கல்லூரிகள், ஏடிஎம் மையங்கள், வங்கிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.

Tags

Next Story