புகையிலை பொருட்கள் விற்றால் கிரிமினல் வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை
கன்னியாகுமரி கலெக்டர் பைல் படம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவைகளுக்கு 2013ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் அந்த உத்தரவு தமிழக அரசால் மீண்டும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வாயில் வைத்து கூடிய விழுங்கக்கூடிய உணவுப் பொருட்களான பான்பராக், பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்து இருக்குமாயின் அவற்றை அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்தில் தயார் செய்யவுவோ, சேமித்து வைக்கவோ, வாகனத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புகையிலை பொருட்கள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு தொடர்ந்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதோடு அதிக அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் இது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu