குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு: 23,284 மாணவர்கள் எழுதினர்

குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு: 23,284 மாணவர்கள் எழுதினர்
X

10 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள்.

குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் 23,284 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 115 மையங்களில் தேர்வு நடந்தது, இதைத்தொடர்ந்து தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டது.

இந்த தேர்வை 11 ஆயிரத்து 697 மாணவர்களும் 11 ஆயிரத்து 587 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 284 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு இன்று தொடங்கி யதையடுத்து காலை 9 மணிக்கு மாணவ-மாணவி கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர், தேர்வு எழுத வந்த பெரும்பாலான மாணவ- மாணவிகளை தங்களது பெற்றோர்களை அழைத்து வந்து தேர்வு மையத்தில் அமர வைத்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!