குழந்தை, பெண்கள் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு: எஸ்பி துவக்கி வைத்தார்

குழந்தை, பெண்கள் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு: எஸ்பி துவக்கி வைத்தார்
X

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தொடங்கி வைத்த குழந்தைகள் நலன், மகளிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு.  

குமரியில், குழந்தைகள் நலன், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பை, எஸ்.பி தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலன், பெண்கள் பாதுகாப்பு, மற்றும் போக்சோ சட்ட விழிப்புணர்வு குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தொடங்கி வைத்தார்.

இதில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றபிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குழந்தைகள் நலன் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் போக்சோ விழிப்புணர்வு சட்டம் குறித்தும் பயிற்சிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், பெண்கள் உதவி மைய காவலர்கள் 23 பேரும், அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் குழந்தைகள் நல அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 37 காவலர்களும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.

Tags

Next Story