குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை
X
குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதையாறு மலை கிராமத்தில் குற்றியார், கிளவியார் உட்பட பல்வேறு கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாததால் அந்தப் பகுதியில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் விதமாக ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரேஷன் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ரப்பர் பால் வெட்டும் பணிக்காக சென்ற போது ரேஷன் கடையில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அங்குள்ள பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பேச்சிப்பாறை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மேஜை உடைக்கப்பட்டு இருந்தது, அதில் பணம் ஏதும் இல்லாத நிலையில் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு சீனி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself