கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி இன்ஸ்பெக்டராக பெர்னார்டு சேவியர் பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி இன்ஸ்பெக்டராக பெர்னார்டு சேவியர்  பதவியேற்பு
X

எஸ்.பி அலுவலக புதிய தனி ஆய்வாளர் பெர்னார்டு சேவியர்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி இன்ஸ்பெக்டராக பெர்னார்டு சேவியர் பொறுப்பேற்று கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி ஆய்வாளராக பணியாற்றி வந்த கண்மணி பணி மாற்றலாகி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் புதிய தனி ஆய்வாளராக பெர்னார்டு சேவியர் இன்று பொறுப்பேற்று கொண்டார். இன்று பொறுப்பேற்றிருக்கும் பெர்னார்டு சேவியர் ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அவர் பணியில் இருந்த நேரத்தில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டதோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை வெகுவாக அடக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள பெர்னார்டு சேவியருக்கு சக ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!