நாகர்கோவில் அருகே குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்க முயற்சி

நாகர்கோவில் அருகே குருவாயூர் விரைவு ரயிலை கவிழ்க்க முயற்சி
X

குருவாயூர் ரயில் கவிழ்ப்பு முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில் அருகே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பூக்கடை வாழோடு பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி குருவாயூர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ரயிலில் அதிர்வை உணர்ந்த ரயில் ஓட்டுனர் அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு ரயில் மீது ஏதோ மோதியதாக தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது பாறையானது ரயிலில் மோதி துண்டுதுண்டாக கிடந்துள்ளது.

இது தற்செயலாக விழுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் ரயிலை கவிழ்க்க முயற்சி நடைபெற்றதா இல்லை தற்செயலாக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் இணைந்து சம்பவ இடத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india