தன்னைக் கொன்று வேறு பெண்ணை மணக்க முயற்சி: ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர்
தனக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட இளம்பெண் ஸ்ரீஜா.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மலையடி பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஸ்ரீஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான மனோஜ் என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தற்போது நான்கரை வயதில் ஷானி மற்றும் மூன்றரை வயதில் ஷாலினி இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த ஆறாவது மாதத்திலிருந்து கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவரின் தாய், தந்தை, தந்தையின் தாய் ஆகியோர் ஸ்ரீஜாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே மது குடிக்கும் பழக்கம் கொண்ட மனோஜ் அவ்வபோது மது குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதாகவும் தெரிகிறது. நாட்கள் செல்லச் செல்ல மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவு, உடை உள்ளிட்ட எந்த ஏற்பாடும் செய்யாத நிலையில், நேற்று ஸ்ரீஜாவை சரமாரியாக மனோஜ் தாக்கியதோடு குழந்தைகளை தன் வசம் வைத்துவிட்டு ஸ்ரீஜாவை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இன்று ஸ்ரீஜா மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர் கணவரின் தொடர் துன்புறுத்தலால் இரண்டுமுறை தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறியதோடு தற்போது தன்னை கணவர் கொலை செய்துவிட்டு மற்றொரு திருமணம் செய்ய மேற்கொள்வதாகவும் கண்ணீருடன் கூறினார். மேலும் தனக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu