சபரிமலை பிரபலம் பிந்து அம்மணி மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

சபரிமலை பிரபலம் பிந்து அம்மணி மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
X

வாலிபர் பிந்து அம்மணியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எதிர்ப்பை மீறி சபரிமலை சென்று பிரபலமான இளம்பெண் பிந்து அம்மணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வைரல் ஆனது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடக்கு கடற்கரை சாலை வழியாக பிந்து அம்மிணி நடந்து செல்லும் போது பின்னால் வந்த வாலிபர் பிந்து அம்மணியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக சபரிமலைக்கு பெண் பக்தர்களை அனுமதிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து சபரிமலைக்குச் சென்ற பிந்து அம்மணி அங்குள்ள பக்தர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சாலையில் வைத்து இவர் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலை தளங்களில் பரவி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரை தாக்கிய நபர் கோழிக்கோடு, வெள்ளயம் பகுதியில் வசிக்கும் மோகன் தாஸ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிந்துவை தாக்கிய நபரை கைது செய்த கொயிலாண்டி போலீசார் ஜாமீனில் வெளிவரக் கூடிய சாதாரண வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். எனவே தனக்கு கேரளா போலீசிடமிருந்து எந்த வித நீதியும் கிடைக்காது என பிந்து அம்மிணி விமர்சித்தும் உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்