குமரியில் அமைதியாக முடிந்தது அதிமுக கழக அமைப்பு தேர்தல்

குமரியில் அமைதியாக முடிந்தது அதிமுக கழக அமைப்பு தேர்தல்
X

அதிமுக உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

குமரியில், 2 நாட்களாக நடந்த அதிமுக அமைப்பு தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

அதிமுக தலைமையில் உத்தரவுப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியான உள்கட்சி தேர்தல், நேற்று காலை தொடங்கி, விறுவிற்யுப்புடன் நடைபெற்று வந்தது.

தேர்தலை கழக மாநில அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தொடக்கி வைத்த நிலையில், முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தேர்தல் ஆணையராக இருந்து தேர்தலை நடத்தினார்.

மாவட்டம் முழுவதும் 28 க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று இரண்டாம் நாளாக நடைபெற்ற அதிமுக அமைப்பு தேர்தல், எந்த வித சலசலப்பும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி உட்பட அனைத்து பொறுப்புகளுக்கும் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு, வெற்றி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story