நான்குவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

நான்குவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
X

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

குமரியில் நான்குவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நான்குவழிச்சாலை பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும் போது குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்குவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags

Next Story
smart agriculture iot ai