குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகை

குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகை
X

மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அலுவலகத்தை பாெதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

குமரியில் குடிநீர் இணைப்புக்கு 7000 ரூபாய் கேட்டு அழைக்களித்ததால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் அரசு 200 ரூபாய் நிர்ணயித்துள்ள நிலையில் ஊராட்சி சார்பில் 7000 ரூபாய் வசூல் செய்து பெருமளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், 7000 ரூபாய் கொடுக்க முடியாதவர்கள் குடிநீர் இணைப்பு கிடைக்காமல் அழைக்களிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியருக்கு ஆதாரங்களுடன் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நீண்ட காலத்துக்கு பின்னர் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture