போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2,235 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதி மீறல்:  குமரியில்  ஒரே நாளில் 2,235 பேர் மீது வழக்கு
X
குமரியில் நடைபெற்ற வாகன சோதனையில் விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 2235 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 2,235 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் செல்வதால் பல்வேறு இடங்களில் வாகன விபத்துகளும் நேரிட்டு வருகின்றன.

மேலும் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும் போலீசாரின் கண்காணிப்பு மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் தலைகவசம், உரிய ஆவணங்கள் இன்றி போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,235 நபர்கள் மீது போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றலாத்தலமான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலாப்பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவது அதிகரித்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து வழக்குகளில் சிக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி