குமரியில் 75 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

குமரியில் 75 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு
X

தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை அதிகாரிகள். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குமரியில் 75 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பணம் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் அதிகாரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 75 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், இதுவரை 47 லட்சத்திற்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story