தூத்துக்குடியில் இருந்து குமரிக்கு வந்த 3000 கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடியில் இருந்து குமரிக்கு வந்த  3000 கொரோனா தடுப்பூசி
X

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குமரிமாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 100 க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி மருந்துகள் தற்போது போதுமான அளவு இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வெளியூர்களிலிருந்து வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடியில் இருந்து 3000 தடுப்பூசி மருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!