கன்னியாகுமரியில் கூலி தொழிலாளி கொலை 3 பேர் கைது

கன்னியாகுமரியில் கூலி தொழிலாளி கொலை 3 பேர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டத்தில்  நடந்த கூலி தொழிலாளி கொலையில் 3 பேரை  போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் வலியமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (37), கூலி தொழிலாளியான இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பி வரவில்லை.

இது தொடர்பாக சுரேஷின் மனைவி லீலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அப்போது சுரேஷின் உடலை பைபற்றிய போலீசார் கரடி தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே போலீசாருக்கு சுரேஷின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக ரகசிய விசாரணையில் இறங்கினர்.

அதில் சுரேஷ் கரடி தாக்கி மரணம் அடைய வில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.இந்நிலையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!