இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை: குமரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை: குமரியில் பாஜகவினர் கொண்டாட்டம்
X

நாகர்கோவிலில் பாஜக மகளிரணி சார்பில் நாகராஜா திடலில் 100 கோடி என வண்ண கோலமிட்டு அகல்விளக்கு ஏற்றி காெண்டாடினர்.

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனையை தொடர்ந்து குமரியில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியா 100 கோடி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது. இதனை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மகளிரணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் 100 கோடி என வண்ண கோலமிட்டு அகல்விளக்கு ஏற்றி கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கோஷங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
ai healthcare products