கன்னியாகுமாரியில் பதட்டமான, வாக்குச்சாவடிகளில் போலீஸ் எஸ்.பி திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 631 இடங்களில் 2243 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அவற்றில் 63 இடங்களில் உள்ள 274 வாக்குசாவடிகள் பதற்றமானவை மற்றும் 5 இடங்களில் 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.
சட்டமன்ற போது தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடை தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல் இன்றும் பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய புதுக்கடை, மார்த்தாண்டம், களியக்கவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை உள்ளிட்ட பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் என அனைத்து வாக்குச் சாவடிகளிலும், பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்றும், தேர்தல் அமைதியாக நடக்க செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu