குமரியில் இருந்து கேரளா - மது கடத்த முயன்ற இருவர் மீது வழக்கு பதிவு.

குமரியில் இருந்து கேரளா - மது கடத்த முயன்ற இருவர் மீது வழக்கு பதிவு.
X

வழக்கு பதிவு ( கோப்புபடம்)

குமரி மாவட்டத்தில் மது கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார் மற்றும் 576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சட்டவிரோதமாக மது விற்போர், கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர், இந்நிலையில் நித்திரவிளை காவல் நிலைய காவல் ஆய்வாளர் பட்டாணி தலைமையில் போலீசார் நம்பாழி பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக கேரள பதிவென் கொண்ட இரண்டு கார் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த கார்களை சோதனை செய்த போது அதில் 576 மது பாட்டிகள் இருந்தது.

அவை சட்டவிரோதமாக கேரளா மற்றும் நித்திரவிளை பகுதிகளில் விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மது கடத்தலில் ஈடுபட்ட பழவிளை பகுதியை சேர்ந்த அசின் ஜோஸ் மற்றும் கார் ஓட்டுநர் என இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, மது கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார் மற்றும் 576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி