கோவிலில் நடைபெற்ற தீ விபத்து சம்பவம் மன வேதனை அளித்தது-ரவிக்குமார்

கோவிலில் நடைபெற்ற தீ விபத்து சம்பவம் மன வேதனை அளித்தது-ரவிக்குமார்
X

இந்துதமிழர்கட்சி நிறுவன தலைவர் இரவிக்குமார்.

மண்டைக்காடு திருக்கோவிலில் நடைபெற்ற தீ விபத்து சம்பவம் மன வேதனை அளித்தது என இந்துதமிழர் கட்சி நிறுவன தலைவர் இரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீ அசம்பாவித சம்பவம் மன வேதனை அளித்தது என இந்துதமிழர்கட்சி நிறுவன தலைவர் இரவிக்குமார் தெரிவித்துள்ளார்

மண்டைக்காடு திருக்கோவிலில் நடைபெற்ற தீ அசம்பாவித சம்பவம் மன வேதனை அளித்தது-இரவிக்குமார்

அவர் கூறும்போது,

இன்று 3.06.2021 வியாழக்கிழமை எம்முடன் இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் ஈசான சிவம் ( எ) ராகவேந்திர ராஜா ,குமரி வெங்கட், மண்டைக்காடு சிவசக்தி மந்த்ர பீடம் சகோதரர்ஜினுசர்மா, ஆகியோருடன் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் சென்றோம். ஸ்ரீ பகவதி அம்மன் தரிசனம் செய்துஉலக மக்கள் அனைவரும் நலமாக இருக்கவும் இயற்கை அழிவுகள் வராமல் உலகைக் காக்கவும் நோய் தொற்றிலிருந்து உலக மக்கள் அனைவரும் நிவர்த்தி பெறவும் மனதார பிரார்த்தனை செய்தோம். ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் ஆறுமுகதரன் அவர்களிடம் இந்து தமிழர் கட்சியின்சார்பில்கோரிக்கை மனுவை கொடுத்தோம்.

திருக்கோயில்இணை ஆணையர் பொறுப்பு செல்வராஜ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். பணி நிமித்தமாக திருநெல்வேலி வந்துவிட்டதாகவும் கோரிக்கை மனுவை செயல் அலுவலரிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் சொன்னார்கள்.

கோரிக்கை மனு விபரம் வருமாறு..

இந்து தமிழர் கட்சியின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கையை மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத் துறைக்கு முன்வைக்கிறோம்.

கோரிக்கைகள்:

1.மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தீ விபத்து குறித்தான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.திருக்கோயிலில் இருக்கக்கூடிய CCTV கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2.கேரள பூசை பாரம்பரியத்துடன் தொடர்புடையஇந்த திருக்கோயில் தேவ பிரசன்னம் -தெய்வ பிரசன்னம் -தெய்வீக அனுகூலநல்லவர்களால் பார்க்கப்பட்டு தேவையான பிராயச்சித்தம் பரிகாரம் செய்யப்பட வேண்டும் அதற்குரிய நடவடிக்கையை நிர்வாகம் எடுக்க வேண்டும்.

3.இந்த தீ விபத்திற்கு காரணமாக இருந்த நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.அனைத்து திருக்கோவில்களில் இதுபோன்ற தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தேவையான தீ தடுப்பு கருவிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

5.உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கை எடுத்து மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் ஏற்பட்ட தீ விபத்து சம்பந்தமாக தீயணைப்பு துறை பயிற்சி பெற்ற ஊழியர்களால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றதாக அறிகிறோம். இதற்கு இந்து தமிழர் கட்சி வரவேற்பு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

6.தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தேரோட்டம் நடைபெறக்கூடிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருத்தேர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதற்கு பல ஊர்களில் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கொட்டகைகளில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.

7.தேர் பாதுகாப்பு கொட்டகை இல்லாமல் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் திருத்தேர்கள்பாதுகாக்கப்பட உடனடியாக கொட்டகை அமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ,தீயணைப்பு கருவிகள் பொறுத்த வேண்டும்.

8.கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் பகவதி அம்மன் மீது பக்தி பேரன்பு கொண்ட அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் உலகம் காக்கும் நாயகி எந்தத் தீங்கும் இல்லாமல் நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பாள் என்ற பிரார்த்தனையோடு அம்மே நாராயணி தேவி நாராயணா லட்சுமி நாராயணி பகவதி தேவி பக்தர்களை காத்திடு என்று பிரார்த்திக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

9.பக்தர்கள் காணிக்கையாக பகவதி அம்மனுக்கு வழங்கிடும் பட்டு புடவை மற்றும் வஸ்திரங்கள் போன்றவை அம்பாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உடனடியாக வேறு இடத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கு உரிய ஏற்பாட்டை திருக்கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும்.

10.திருக்கோயில்களில் ரசாயன கலப்பு இல்லாத கற்பூரம் ஏற்ற வேண்டும் இல்லையெனில் நெய்தீபம் ஏற்றி அம்மனுக்கு வழிபாடு செய்ய வேண்டும். என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்ட்டு இருந்தது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்