குடி பிறர் குடியையும் சேர்த்து கெடுக்கும்..!

குடி பிறர் குடியையும் சேர்த்து கெடுக்கும்..!
X
குடி போதையில் அரிவாளுடன் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவலாயம் புளியன்விளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா (31). இவர் வீட்டில் தனியாக இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த செல்வ சூர்யா( 22) என்ற இளைஞர் குடிபோதையில் கையில் அரிவாளுடன் வந்து தனியாக இருந்த புஷ்பலதாவை அருவருக்கத்தக்க வார்த்தையில் திட்டி கையில் இருந்த அரிவாளால் வீட்டின் கதவை அடித்து உடைத்து ஆக்ரோஷமாக கொலைவெறி தாக்குதலில் ஈடுபட முயன்றார்.

இதை வீட்டிலிருந்த புஷ்பலதா தனது செல்போனில் படம் எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புஷ்பலதா புகார் மனு அளித்துள்ளார்.

அதில் தனது சகோதரன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். தனது தந்தை வயதான காலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரேஷன் கடையில் அரிசி அளந்து போடும் பணியை தனது தாய் செய்து வருகிறார். இது பஞ்சாயத்து தலைவி ரெஜினா ராஜேஸ்க்கு பிடிக்காத காரணத்தினால் பழிவாங்கும் நோக்கத்துடன் எங்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதும், தற்போது அவர் மகனை தூண்டி விட்டு தங்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட முயன்றதாகவும் கூறி உள்ளார்.

மேலும் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புஷ்பலதா மனு அளித்துள்ளார். இதனிடையே போதையில் வாலிபர் அரிவாளுடன் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!