கன்னியாகுமரியில் வாகன சோதனை ரூ 4.83 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரியில் வாகன சோதனை ரூ 4.83 லட்சம் பறிமுதல்
X
கன்னியாகுமரி மாவட்டம் ஆரால்வாய்மொழியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ 4.83 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் நேற்று இரவு வாகன சோதனை நடைபெற்றது.அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 4 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் தோவாளை துணை வட்டாட்சியர் அன்னபாயிடம் ஒப்படைத்தனர்.இந்த லாரி கேரளாவில் சரக்கை இறக்கி விட்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!