குமரியில் முதல் சூரிய உதயத்தை காண தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள்

குமரியில் முதல் சூரிய உதயத்தை காண தடையை மீறி குவிந்த சுற்றுலா பயணிகள்
X

குமரியில் புது வருடத்தின் முதல் சூரிய உதய காட்சியை காண தடையை மீறி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குமரியில் புது வருடத்தின் முதல் சூரிய உதய காட்சியை காண தடையை மீறி முண்டியடித்த சுற்றுலா பயணிகள்.

கொரோனா பரவல் மற்றும் ஓமிக்கிரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும் பார்வையிடவும் தடை விதித்தது.

மேலும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது, இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிலந்தது. இந்நிலையில் புத்தாண்டின் முதல் சூரிய உதய காட்சியை காண சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கூடினர்.

அதன்படி வந்த சுற்றுலா பயணிகள் போலீசார் அமைத்து இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி கடற்கரை பகுதிக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கடற்கரை பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதன் காரணமாக ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் உள்ள கடற்கரை சாலைகள், மீனவ கிராமங்கள் மற்றும் படகு துறைகளில் கூடிநின்று புத்தாண்டின் முதல் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் பல நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் உயரமான கட்டிடங்கள் மீது எறி நின்றும் கட்டிடத்தின் மதில் சுவர்களில் ஏறி நின்றும் சூரிய உதய காட்சியை கண்டனர்.

புத்தாண்டின் முதல் சூரிய உதய காட்சியை காண வேண்டும் என்ற ஆவலில் உயரமான கட்டிடங்களில் ஆபத்தான முறையில் முண்டியடித்து நின்ற சுற்றுலாப் பயணிகள் அங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானது. மேலும் புத்தாண்டின் முதல் சூரிய உதய காட்சிகளை காண வந்த சுற்றுலா பயணிகள் அதனை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்போனில் பதிவு செய்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!