நாளை ஆடி அமாவாசை: குமரி கடற்பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை

நாளை ஆடி அமாவாசை: குமரி  கடற்பகுதியில் தர்ப்பணம் செய்ய தடை
X
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் குமரி கடற்பகுதிக்கு செல்லும் அனைத்து வழிதடங்களும் அடைக்கப்பட்டது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதோடு அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன்படி தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் குமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கன்னியாகுமரி வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

இந்நிலையில் நாளை ஆடி அமாவாசை அனுசரிக்கப்படும் நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது, இதனை தொடர்ந்து கடற்கரை பகுதிக்கு செல்லும் அனைத்து வழிதடங்களும் அடைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!